(குருநாகல் நிருபர்)
இலங்கையிலிருது துருக்கி நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் தொகையை அதிகளவு அதிகரித்துக் கொள்வதற்கும் மற்றும் இலங்கை துருக்கி நாடுகளுக்கிடையிலான சமய கலாசார ரீதியிலான உறவை மேலும் கட்டி எழுப்புவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் தெரிவிப்பு
துருக்கி நாட்டிலிருந்து இலங்கை வருகை தந்துள்ள துருக்கி நாட்டு ஜனாதிபதியின் ஆசிரியாப் பிராந்திய நாடுகளின் சமய விவகார ஆலோசகர் இப்றாஹீம் தலைமையிலான குழுவினர் மற்றும் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சின் அலுவலகத்தில் முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் அவர்களுக்கிடையிலான சந்திப்பு 27-04-0216 நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது இலங்கையிலிருது துருக்கி நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் தொகையை அதிகளவு அதிகரித்துக் கொள்வதற்கும் மற்றும் இலங்கை துருக்கி நாடுகளுக்கிடையிலான சமய கலாசார ரீதியிலான உறவை மேலும் கட்டி எழுப்புவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கப்படுதற்கான கலந்துரையாடலகள் இடம்பெற்றன.
முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் எம். எச். ஏ பாஹிம், வக்பு சபையின் தலைவர் யாசீன், ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி சியாத் ஆகியவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இக்பால் அலி
