(எம்.ரி.எம்.யூனுஸ்)
காத்தான்குடி பிரதான வீதியில் இடம்பெறும் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் பிரதான வீதியின் U வளைவினதும் மஞ்சள் கோட்டுக் கடவைக்கு அருகிலுமுள்ள பூச்சாடிகளை அகற்றும் பணி இன்று 11.05.2016 புதன்கிழமை நகரசபை செயலாளர் சர்வேஸ்வரன் மேற்பார்வையில் இடம்பெற்றது.
இதன்போது மூன்று பூச்சட்டிகள் அந்நாஸர் வித்தியாலய சந்தி, அமானா வங்கி சந்தி, குட்வின் சந்தியில் அகற்றப்பட்டது.
முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் நகரசபை உத்தியோகத்தர்கள் காகுடி பொலிஸ்நிலைய மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி ஆர்.டி துஷார ஜெயலால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் வேண்டுகோளின் பேரில் புனர்வாழ்வு மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பனிப்புரையில் பூச்சட்டிகள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





