நிந்தவூர் பிரதேச செயலக விளையாட்டு விழா 2016

Written By avathani Media Network on Monday, May 2, 2016


(முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்)

நிந்தவூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டுப் போட்டி இன்று 31-04-2016 நிந்தவூர் பொது மைதானத்தில் பி.ப 2:30 மணியளவில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி R.U.அப்துல் ஜலீல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ பைசால் காசிம் அவர்கள் மற்றும் விசேட அதிதியாக மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுத்தீன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் ஊர் பிரமுகர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வை நிந்தவூர் பிரதேச செயலக விளையாட்டு துறை உத்தியோகத்தர் (S.O) M.R.M. அஸ்வத் அவர்கள் சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தமை பாராட்டத்தக்க விடையமாகுமென்பது குறிப்பிடத்தக்கது.





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.