NFGG மகளிர் அணி நடாத்திய மகளிர் தின நிகழ்வும் துறை சார் முதன்மையாளர்கள் கௌரவிப்பும்...!

Written By avathani Media Network on Monday, April 4, 2016

(NFGG ஊடகப் பிரிவு)

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் கிழக்குப்பிராந்திய மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த மகளிர்தின நிகழ்வும் மற்றும் துறைசார் முதன்மையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் 03.04.16 அன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புள்ளாஹ் இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது. 

'தடைகளைத்தாண்டி...' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி PSM சார்ள்ஸ் மற்றும் கௌரவ அதிதிகளாக தென் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு, மட்டக்களப்பு மத்தி வலைய முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி SA நசீரா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வின் விஷேட அதிதிகளாக கலந்து கொண்ட கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் DR.ILM ரிபாஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் MM அப்துர் ரஹ்மான் ஆகியோர் விசேட உரைகளை ஆற்றினார். 

அத்தோடு NFGGயின் பிராந்திய சபை சிரேஷ்ட உறுப்பினர்கள், மகளிர் அணி உறுப்பினர்கள், பிரதேச பிரமுகர்கள், முன்பள்ளி ஆசிரியைகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வின் பிரதான அம்சமாக காத்தான்குடி பிரதேசத்தின் தேர்வு செய்யப்பட்ட துறைகளில் முதன்மையாளர்களாக சாதித்த 20 பெண்களை கௌரவிக்கின்ற நிகழ்வு இடம்பெற்றது. 

இக்கௌரவிப்பு நிகழ்வில் பின் வரும் சகோதரிகள் குறிப்பிட்ட துறைகளுக்காக கௌரவிக்கப்பட்டனர்.

1. முதல் பெண் ஆசிரியை (1961)

ஹாஜியானி பக்கீர் பாத்தும்மா கபூர்.

2. முதல் மௌலவியாக்கள்(1971)

திருமதி. ஹைறுன்னிசா கையூம்

3. முதல் மௌலவியாக்கள்(1971)

திருமதி. சித்தி கதீஜா நூர் முஹம்மட்

4. முதல் பெண் எழுத்தாளர்(1972)

காத்தான்குடி பாத்திமா

5. முதல் பெண் அதிபர் (1978)

திருமதி. PMU.ஸாஹிப் BA.

6. முதல் முன்பள்ளி ஆசிரியை( 1978)

திருமதி லத்தீபா ஆதம் லெப்பை

7. முதல்குடும்ப சுகாதார உத்தியோகத்தர் (1980)

திருமதி சித்தி நயீமா செய்னுல் ஆப்தீன்.

8. முதல் பெண் பட்டதாரி.( 1981)

ஹாஜிமா .ஜெஸீமா ஆதம் லெப்பை.BSc

9. முதல் பெண் வர்த்தக பட்டதாரி (1984)

திருமதி பரீதா உம்மா அப்துல் மஹ்றூப் B.com

10. முதல் பெண் ஹாபிழா (1990)

திருமதி பாத்திமா சாக்கிறா முகமட் சாக்கிர் ஹுசைன்

11. முதல் பெண் சட்டத்தரணி (1993)

திருமதி ஆத்திகா நசீர் LLB.Attorney at law

12. முதல் பெண் வைத்தியர் (1995)

DR. அலீமா உம்மா அப்துர்ரஹ்மான் MBBS SL

13. முதல் பெண் பல் வைத்தியர் (1995)

திருமதி சறூபா அப்துஸ்ஸமட் BDS

13. முதல் பெண் தாதி உத்தியோகத்தர்( 1998)

திருமதி F. உம்முல் நிஹாறா முஹம்மட் பழீல்

14. முதல் பெண் அரச நிர்வாக அதிகாரி ( 2000)

திருமதி முஹமட் அலி ஆரிபா SLAS

15. முதல் பெண் பொறியியலாளர் (2007)

திருமதி அப்துல் லத்தீப் பாத்திமா ஷhனாஸ் BSc. Eng (Hons)

16. முதல் பெண் சிறுவர் வைத்திய நிபுணர். (2008)

DR.MI. ரிபாயா MBBS.DCH,MD

17. முதல் பெண் விஞ்ஞான முதுமானி.(2008)

திருமதி MNM.. சுரையா MSc

18. முதல் பெண் ஆசிரிய ஆலோசகர் (2009)

திருமதி பரீதா ஸாஹுல் ஹமீத.;

19. முதல் பெண் கலைமுதுமானி.(2015)

திருமதி. அஜீறா கலீல்தீன் MA

இந்நிகழ்வில் மேலும் பல சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



















Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.