(அனஸ் அப்பாஸ் )
கொழும்பு விசும்பாயாவில் அமைந்துள்ள அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள்யோசனைகளைப் பெறும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேயநாயக்க!
இவர் கண்டியைச் பிறப்பிடமாகக் கொண்டவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் B.sc பட்டதாரியான இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் LLB பட்டத்தினையும் அதே பல்கலைக்கழகத்தில் LLM பட்டத்தினையும் பூர்த்தி செய்துள்ளார். இலங்கை சமசமாஜ கட்சியில் துவக்க கால உறுப்பினரொருவரான இவர் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
தற்பொழுது பல்கலைக்கழக கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராகவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டக்குழு தலைவராகவும் பதவி வகித்து வரும் லால் விஜேயநாயக்க, அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை வினவும் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 43 வருடங்கள் சட்டத் தரணியாக இருந்த பழுத்த அனுபமிக்க லால் விஜேயநாயக்கவினை விசும்பாயவிலுள்ள அவருடைய அலுவலகத்தில் சந்தித்தோம்.
நேர்காணல் வீடியோ (தமிழ் மொழிபெயர்ப்புடன்) ::https://youtu.be/EDWTESSFDd4
