இலங்கையணி சார்பாக ஈரானில் கபடி விளையாட்டில் வெற்றி பெற்ற வீரனுக்கு நிந்தவூரில் பெரு வரவேற்பு.

Written By avathani Media Network on Tuesday, April 26, 2016


(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயத்தின் மாணவரும், மதீனா விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு வீரருமான எம்.ரி.அஸ்லம் சஜா அண்மையில் ஈரானில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கிடையிலான கபடி சுற்றுப் போட்டியில், கணிஷ்ட பிரிவில் இலங்கை அணி சார்பாக கலந்து கொண்டு தாய் நாட்டிற்;கும், பிறந்த ஊரிற்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

நாடு திரும்பிய தேசிய வீரர் அஸ்லம் சஜா அவரது சொந்த ஊரான நிந்தவூரிற்கு இன்று வருகை தந்தபோது நிந்தவூர் பொது மக்கள், விளையாட்டுக் கழகங்கள்,இளைஞர் கழகங்கள், சமூகசேவை அமைப்புக்கள் ஆகியன ஒன்றிணைந்து பெருவரவேற்பு அளித்தனர்.

மண்ணின் மைந்தன் அஸ்லம் சஜா மாலைகள் அணிவிக்கப்பட்டு, பொன்னாடைகள் போற்றி, நினைவுச் சின்னங்கள், பரிசுப்பொருட்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, பேன்ட் வாத்தியங்கள் முழங்க, வானவேடிக்கைகளுக்கு மத்தியில் திறந்த வாகன ஊர்தியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆரம்பமான இவ்வூர்வலம் கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி வழியே சென்று முதலாhம், இரண்டாம், மூன்றாம் குறுக்குத் தெருக்கள் ஊடாக மதீனா மகா வித்தியாலயத்தைச் சென்றடைந்தது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல்> கிழக்கு மாகாண முன்னாள் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளரும்> நிந்தவூர் நலன்பரிச் சபையின் தலைவருமான எம்.எச்.யாக்கூப் ஹசன்> விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.அனஸ்அஹமட் பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் எனப்பலரும் இதில் கலந்து கொண்டன
ர்.






Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.