மேசி தொழில் பயிற்சி பயிலுனர் கற்கை நிலையத்தில் புதிய மாணர்வளைச் சேர்த்துக் கொள்ளவிண்ணப்பம் கோரல்

Written By avathani Media Network on Wednesday, April 6, 2016



(இக்பால் அலி)


மேசி தொழில் பயிற்சி பயிலுனர் கற்கை நிலையத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான புதிய மாணர்வளைச் சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பம் கோரபட்டுள்ளது.

க. பொ. த சாதாரண தரம் அல்லது உயர் தரம் ஆகிய பரீட்சைகளில் தோற்றிய சகல மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். சிறந்த உடல் ஆரோக்கியமுடையவராக இருத்தல் வேண்டும். 17 வயது முதல் 20 வயதுக்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும். வளாகத்தினால் நடத்தப்படும் பரீட்சையில் சித்திபெறுதல் வேண்டும்.

15 வருட கால தொழில் அனுபவங்களைக் கொண்ட நிலையான போதானா ஆசிரியர்களைக் கொண்டு இங்கு பயிற்சிகள் நடைபெறுகின்றன. இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களின் அடிப்படையில் தம்மை பயிற்றுவித்துக் கொள்ள முடியுமான விடுதி வசதிகளைக் கொண்டு காணப்படும் கல்வி நிறுவனமாகும் இது.

இங்கு மின்னியல் பாடநெறிகள், உருக்கு ஒட்டுதல் பாட நெறி, நீர்க் குழாய் பொருத்துதல் பாடநெறி, குளிர் சாதானமும் வளிசீராக்கலும் பாட நெறி உள்ளிட்ட கற்கை நெறிகளுக்காக புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். 

எனவே இதற்கான விண்ணப்பங்களை 20-04-2016 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக பதிவுத் தபால் மூலம் பணிப்பாளர் , மேசி, வீ. டீ. சி. த. பெ. எண். 01 கொழும்பு வீதி மருதன்குழி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அத்துடன் மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக 0322268401 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றனர்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.