(இக்பால் அலி)
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏனைய சிங்கள தமிழ் மொழி பாடசாலைகளுக்கு வழங்கும் விடுமுறை தினத்திலேயே முஸ்லிம் பாடசாலைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தான் விடுத்த கோரிக்கைக்கு இணங்க கல்வி அமைச்சு முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக என முஸ்லிம் சமயம் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 18 திகதி வரை வழங்கப்படும் என கல்வி அமைச்சு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. எனினும் தாம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை வழங்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
முஸ்லிம் பாடசாலைகளில் கணிசமானளவு சிங்கள மற்றும் தமிழ் ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர். இவர்கள் தம்முடைய சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுவதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்வதற்காக இந்த விடுமுறையை வழங்குமாறு விடுத்த வேண்டுகோளின் பிரகாரமே 11 ஆம் திகதி வழங்கப்படவிருந்த விடுமுறை 8 ஆம் திகதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

