(எம்.ரி.எம்.யூனுஸ்)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தைப் பிரதேசத்திலுள்ள மல்லிகைத்தீவு வீதியில் இன்று (28) வியாழக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஆற்று மணல் ஏற்றிச் சென்ற லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாகவும் இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரம், மோட்டார் சைக்கிள் மீது மோதிய லொறியின் சாரதி, தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார் எனவும் குறித்த விபத்து சம்பவம்தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




