(எம்.ரி.எம்.யூனுஸ்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி மெரைன் டிரைவ் கடற்கரை வீதியை செப்பணிடுவதற்கான அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனடிப்படையில் கடற்கரை வீதி சந்தியிலிருந்து இரு புறமுமாக மொத்தம் 600 மீற்றர்கள் நீளமான
வீதி புணரமைப்புச் செய்யப்படவுள்ளது.
புணரமைப்பு வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்று 25.04.2016 ஆந் திகதி திங்கற்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் நிஹாஜ் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் குறித்த வீதிக்கு நேரடியாக சென்று புணரமைப்புச் செய்யப்படவுள்ள வீதியின் நீளம், அகலம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கணிப்பீடுகளை மேற்கொண்டனர்.
எதிர்வரும் ஜூன் மாதத்தில் இவ்வீதியின் புணரமைப்புக்கான விலைமனுக்கோரல் அழைப்பு விடுக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்திற்குள் புணரமைப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
