கிழக்கிலங்கை பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரி மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

Written By avathani Media Network on Friday, April 29, 2016


(S.சஜீத்)

கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வளாகமாக அமைந்து காணப்படும் இசை நடனக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியின் நிர்வாகத்தினர்களுக்கு எதிராக (29.04.2016) வெள்ளிக்கிழமை இன்று காலை 10மணியளவில் கல்லூரியின் முன்பாக அமர்ந்து கொண்டு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது கல்லூரி மாணவர்கள் குறிப்பிடுகையில் கல்லூரியின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக கல்லூரியின் நிர்வாகத்தினருக்கு எதிராகவே இவ் ஆர்ப்பாட்டம் முன்னனேடுக்கப்படுகிறது என்றும் நிர்வாகத்தினரை மாற்றியமையக்க வேண்டும் என்றுதான் இவ் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் இதன்போது நிர்வாகத்தினர்களுக்கு எதிராக கெளிச்சித்திரங்கள் வரைந்து கொண்டும் மாணவர்கள் ஆர்ப்பாடத்தை முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.









Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.