மஹிந்த, கோத்தா, பசில் ஆகி­யோ­ருக்கு கடூ­ழியச் சிறைத்­தண்­டனை கிடைத்­தி­ருக்கும்.!

Written By avathani Media Network on Friday, April 29, 2016


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமைப் பத­வியை ஏற்­றி­ருக்­காது விட்­டி­ருந்தால் மஹிந்த ராஜபக் ஷ, கோத்­தபாய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ ஆகிய மூவரும் இன்று கடூ­ழிய சிறை­த்தண்­ட­னைக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருப்­பார்கள். ஐக்­கிய தேசியக் கட்­சியின் சுய­ரூபம் வெளி­வந்­தி­ருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் ஊடகப் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். மஹிந்­த­வுடன் இருந்­த­வர்கள் அவரை கைவிட்­ட­போதும் ஜனா­தி­ப­தியும் நாமுமே அவ­ருடன் இருந்தோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய தேசியக் கட்சி எப்­போதும் கடும்­போக்கு கொள்­கையில் இருந்து செயற்­பட்­ட­மைக்­கான வர­லா­றுகள் தான் உள்­ளன. அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் குடும்ப அர­சாங்­கத்தின் மீது உள்ள விரோ­தமும் எமக்குத் தெரியும். அவ்­வாறு இருக்­கையில் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் ஏற்­பட்ட அர­சியல் தளம்பல் நிலை­மை­களின் போது கட்­சியின் தலை­மைத்­து­வத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சேன ஏற்­றி­ருக்­கா­விடின் இன்று நிலை­மைகள் மிகவும் மோச­மா­ன­தாக அமைந்­தி­ருக்கும்.

அதேபோல் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ, கோத்­தபாய ராஜபக் ஷ, மற்றும் பசில் ராஜபக் ஷ ஆகிய மூவரும் கைது­செய்­யப்­பட்டு இன்று மூவ­ருக்கும் கடூ­ழிய சிறைத்­தண்­டனை வழங்­கப்­பட்­டி­ருக்கும். ஐக்­கிய தேசியக் கட்­சியின் கைவ­ரி­சையை காட்­டி­யி­ருப்­பார்கள். அவ்­வாறு இருக்­கையில் ஜனா­தி­ப­தியும் நானும் கட்­சிக்குள் இருந்­த­தனால் தான் இவர்­களை காப்­பாற்ற முடிந்­தது.

ஆனால் அன்று மஹிந்த ராஜபக் ஷவுடன் இருந்த பசில் ராஜபக் ஷ போன்­ற­வர்கள் கட்­சியை நாசப்­ப­டுத்­தி­யது மட்­டு­மின்றி மஹிந்த ராஜபக் ஷவின் தோல்­விக்கும் கார­ண­மாக இருந்­தனர் என்­பதே உண்­மை­யாகும். பணத்தை கொட்டி மக்­களின் ஆத­ரவை பெற்­று­வி­டலாம் என நம்பி செயற்­பட்­ட­மையே கடந்த தேர்­தலில் எமது கட்சி தோல்­வியை தழுவக் கார­ண­மாக அமைந்­தது.

ஆனால் மஹிந்த ராஜபக் ஷ தோல்­வியை சந்­தித்­த­வுடன் முதலில் நாட்­டை­விட்டு தப்­பி­யோ­டி­ய­வரும் பசில் ராஜபக் ஷ என்­பதை மறந்­து­விட வேண்டாம். தேர்தல் முடிந்து 24 மணித்­தி­யா­லத்தில் நாட்­டை­விட்டு வெளி­யேறி மஹிந்த ராஜபக் ஷவை தனி­மைப்­ப­டுத்­தி­ய­வர்கள் இன்று மீண்டும் மஹிந்­தவின் பெயரை வைத்து குழப்­ப­கர அர­சி­யலை முன்­னெ­டுக்க பார்க்­கின்­றனர்.

அதற்கு மஹிந்த ராஜபக் ஷ எவ்­வா­றான வகையில் செயற்­ப­டப்­போ­கின்றார் என்­பதே முக்­கி­ய­மா­ன­தாகும். எவ்­வாறு இருப்­பினும் நாம் இன்றும் அவ­ருடன் உள்ளோம். எந்த சந்­தர்ப்­பத்­திலும் அவரை கைவிட நாம் தயா­ரில்லை.

இன்று புதிய கட்சிகளை உருவாக்கி தனித்த அரசியல் பயணத்தை ஆரம்பி ப்பதாக மஹிந்த ராஜபக் ஷ கூறவில்லை. அவருடன் இருக்கும் குழப்பக்கார உறுப்பினர்களே கூறுகின்றனர். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட நாம் அனுமதிக்கமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.