(எம்.ரி.எம்.யூனுஸ்)
இலங்கையில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை பகுப்பாய்வு செய்யும் மத்திய செயலகம் என்ற பெயரில் புதிய பொலிஸ் பிரிவொன்று நாளை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
ஏற்கெனவே செயற்படும் கைவிரல் ரேகை பணியகத்துடன் இணைந்து இந்தப் புதிய பொலிஸ் பிரிவின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்கள் பகுப்பாய்வு மத்திய செயலகம் எனப்படும் புதிய பொலிஸ் பிரிவின் அங்குரார்ப்பண வைபவம் நாளை கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த வைபவத்தில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

