தொழில் நிமிர்த்தம் புலம்பெயர்ந்தோர்க்கான ஆரம்பத்திட்ட கலந்துரையாடல் .

Written By avathani Media Network on Tuesday, April 12, 2016

(
நிந்தவூர் 
முஹம்மட் ஜெலீல்)

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் புலம்பெயர் தெழிலாளர்களுக்கான "சுவாட்" நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள நிந்தவூர் பிரதேச மக்களுக்கான அபிவிருத்தி திட்டம் தொடர்பான விளக்கக் கூட்டம் இன்று 12-04-2016 நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஹாஜியானி திருமதி ஆர்.யு. அப்துல் ஜலீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

மேலும் இதில் வளவாளராக அக்கரைப்பற்று "சுவாட்" நிறுவனத்தைச் சேர்ந்த திட்டமிடல் பணிப்பாளர் "லதன் அவர்கள் புலம்பெயர் தெழிலாளர்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக தெளிவாக விளக்கியதோடு அதனால் மக்கள் பெறக்கூடிய பயன்களையும் விரிவாக விளக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நிந்தவூர் பொது சுகாதார பரிசோதகர் திருமதி, தஸ்லிமா அவர்களும், நிந்தவூர் இணக்க சபை தவிசாளர் திருமதி.பி. அப்துல் மஜீட் அவார்களும் நிந்தவூர் பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்குரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.