குருநாகல் மாவட்டத்தில் 80 காபட் வீதிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. - அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

Written By avathani Media Network on Tuesday, April 12, 2016


(இக்பால் அலியார்)

குருநாகல் மாவட்டத்தில் 80 காபட் வீதிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஒவ்வொரு வீதியும் 10 கீ. மீ. அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்படும். அதற்கு நாங்கள் கேள்விப் பத்திரம் தாக்கல் செய்யவுள்ளோம். இணக்கப்பட்டுக்கு பின் கையொப்பம் கைச்சாத்திட்டு கொந்துராத்துக்காரர்களிடம் ஒப்படைப்போம். கடந்த காலங்களில் கேள்விப் பத்திரம் தாக்கல் செய்யாமல் வேலைத் திட்டங்கள் விருப்பத்தின் பேரிலேயே கையளிக்கப்பட்டன. எந்தவிதமான கேள்விப் பத்திரங்களும் அப்போது தாக்கல் செய்ய வில்லை. எந்த வேலைத் திட்டமாக இருந்தாலும் கேள்விப் பத்திரம் தாக்கல் செய்யாமல் ஆரம்பிக்க வேண்டாம் என்று பிரதமர் ரனில் விக்கிரமசிங்க கூறியுள்ளார் என்று உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள புகையிரதக் கடவையில் 2279 மில்லியன் ரூபா செலவில் ஸ்பெயின் நாட்டின் நிதி உதவின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று 11-04-2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இறுதிக் கால கட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து எமது நாடடுக்கு கிடைக்கும் உதவிகள் மிகவும் குறைந்து காணப்பட்டன. இதற்கான முக்கிய காரணம் ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் தொடர்பாக எமது நாட்டுக்கு எதிராக முன் வைக்கப்பட்ட பிரேரணைகள் மூன்று விடுத்தம் நிறைவேற்றப்பட்டன. மைந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று இருப்பராயின் எமது நாட்டுக்கு எதிராக பொருளதார தடை உத்தரவு வந்திருக்கும். மூன்று வரூடம் எமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. எமது நாட்டினுடைய நல்ல சகுனத்தின் காரணமாக எமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் எல்லாம் சுமூகமான நிலைமைக்கு கொண்டு வந்தோம்.

மஹிந்த ராஜபக்ஷவின் இறுதிக் கால கட்டம் மிகவும் கஷ்ட காலமாக இருந்தது. வெளிநாட்டு சமூகத்தின் நெருக்கடி நிலைக்கி உள்ளாகி பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய வரும் என்ற காரணத்தினாலேயே அவர் முன் கூட்டி தேர்தலை நடத்தினார். சகல அபிருத்திப் பணிகளும் கீழே விழுந்திருந்தன. நாங்கள் வெளிநாட்டவர்களுடன் கதைத்து அவர்களுடைய நல்லபிப்பிராயத்தைதையத்தை பெற்றுக் கொண்ட பின்னரே செயற்படுகின்றோம். அதனால்தான் எங்களால் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடிந்துள்ளன.

வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்திற்கும் 40 காபட் பாதைகள் ஜுலை மாதம் முதல் வழங்கவுள்ளோம். அபிவிருத்திப் பணிகள் எதுவும் நாங்கள் நிறுத்த வில்லை. எல்லா வகையான அபிவிருத்திப் பணிகளும் நல்லாட்சியின் செயற் திட்டத்தின் கீழ் தான் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த காலத்தில் கோப் சிட்டி நிர்மாணிப்பதற்காக சீனா நாட்டுக்கு இந்த அரசாங்கம் காணியை எழுதிக் கொடுத்திருந்தது. ஆனால் எமது பிரதமர் ரனில் விக்கிரமசிங்க சினா சென்று அதனை இல்லாமற் 99 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். 1950 களில் சீனா நாட்டுடன் எந்த நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுபவதில்லை. சீனாவின் அரசியல் கொள்கையை ஏனைய நாடுகள் முரண்பட்ட நிலையில் இருந்தன. இவ்வாறான கால கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிதான் 1952 ல் சீனாவுடன் நட்புறவைக் கொண்டு வர்த்தக ரீதியிலான ஒப்பந்தம் ஒன்றை செய்தது. உலக நாட்டவர்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் சீனாவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொடுக்கல் வாங்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டன. இந்த ஒப்பந்தம் 30 வருடங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

எமது நாட்டுப் பணங்கள் வெளி நாட்டு வங்கிகளில் கோடிக் கணக்கான பணங்கள் வைப்புச் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தகவல்களை அமெரிக்கா தகவல் நிலையங்களே வெளியிடுகின்றன. 

இந்நிகழ்வில் பிரதிப் போக்குவரத்து அமைச்சர் அசோக அபேசிங்க, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான அஜித் ரோஹன, ரிஸ்வி ஜவஹர்ஷா, பொல்கஹவெல தேர்தல் தொகுதி அமைப்பாளர் எச். எம். ஜயரட்ன ஆகியோர் இங்கு உரை நிகழ்த்தினர்.






Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.