அக்கரைப்பற்றில் இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் சேவை நலன் பாராட்டு விழா

Written By avathani Media Network on Thursday, April 21, 2016




( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் வருடாந்த சேவை நலன் பாராட்டு விழா நேற்று அக்கரைப்பற்று தர்மரெத்ன சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.பி.கமால்தீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விக் காரியாலய கணக்காளர் கே.றிஸ்வி யஃசர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், முன்னாள் அதிபர்கள், சிறப்பாகப் பணியாற்றிய கல்விக் காரியாலய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, கருத்துத் தெரிவித்த கணக்காளர் றிஸ்வி யஃசர் இங்கு கருத்தத் தெரிவிக்கையில்:- 'ஆசிரியர்கள் எப்போதும் பாராட்டப்பட வேண்டிய போற்றப்பட வேண்டியவர்கள். இவர்கள் ஏணிகளைப் போன்று ஏனையவர்களை ஏற்றி விட்டு, அவர்கள் அதே இடத்திலிருந்து ஆனந்தமடைபவர்கள். இவர்களால் தான் எங்களைப் போன்ற கணக்காளர், பொறியலாளர், வைத்தியர் எனப் பலரும் உருவாக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட ஆசிரியப் பெருந்தகைகள் காரியாலயங்களுக்கு வந்து மணித்தியாலக் கணக்கில் காத்திருந்து,பைல்கள் தேடியெடுத்து சம்பள உயர்வு பெறுவதென்பது மிகவும் வேதனையானது. யாராக இருந்தாலும் ஆசிரியர்களின் தேவைகளை உடன் செய்து கொடுக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்' எனத் தெரிவித்தார்.








Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.