வீதி விபத்துக்களை தடுக்கும் விஷேட கூட்டம்.

Written By avathani Media Network on Thursday, April 21, 2016


(எம்.ரி.எம்.யூனுஸ்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இன்று 19.04.2016 செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவ சிப்லி பாறூக் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.

வீதி விபத்துக்களை குறைக்க மிக அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களாக மே மாதம் 10 ம் திகக்குள் காத்தான்குடியில் இருக்கின்ற வீதிக் கடவைகளினதும் பிரதான வீதிக் குறுக்குகளுக்கும் வேகக் குறைப்பினை ஏற்படுத்துவதென்றும் உடைந்த காண் மூடிகளை ஜுலை மாத இறுதிப்பகுதிக்குள் இடுவதெனவும் வெள்ளி, ஞாயிறு தினங்களில் கூடுதலான போக்குவரத்து பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் வீதி சமிக்ஞைகளை காத்தான்குடி வீதிகளில் அமுல்படுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் நகரசபை செயலாளர் சர்வேஸ்வரன் காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்திய அதிகாரி எம்.எஸ்.எம்.ஜாபிர் பிரதேச செயலக திட்டமிடல் உத்தியோகத்தர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.