மட்டக்களப்பு மாவட்டத்தில் இளநீர், வெள்ளரிப்பழம் ஆகியவற்றிற்கு அதிக கிராக்கி...

Written By avathani Media Network on Wednesday, April 6, 2016


(ஜுனைட்.எம்.பஹ்த்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக 
ஏற்பட்டுள்ள உடல் உஸ்ணத்தை தடுக்கும் பொருட்டு இளநீர், வெள்ளரிப்பழம் போன்றவற்றை மக்கள் அதிகம் கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதன்காரனமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடி, ஏறாவூர், மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி ஆகிய பகுதிகளில் இளநீர், வெள்ளரிப்பழம் ஆகியவற்றிற்கு சிறந்த கிராக்கி ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இளநீர் ஒன்று 50 ரூபாய் முதல் 60 ரூபா வரையிலும் வெள்ளரிப்பழம் பழத்தின் பருமனுக்கு ஏற்ப  
100 ரூபாய் முதல் சுமார் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இப்பழங்கள் பெரும்பாலும் உஸ்னமான காலங்களிலேயே அதிகமாக கிடைப்பதும் ஒரு 
சிறப்பம்சமாகும்.

பெரும்பாலும் இப்பழம் மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் பெருமளவில் செய்கை 
பண்ணப்பட்டு ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காக 
கொண்டு செல்லப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.