மு.கா. உயர் பீடக் கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு!

Written By avathani Media Network on Monday, April 25, 2016


(அஸ்லம் எஸ்.மௌலானா)

நாளை செவ்வாய்க்கிழமை (26ஆம் திகதி) நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடக் கூட்டம் எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

நாளை கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வு இடம்பெறவிருப்பதால் அதில் எமது கட்சியின் சார்பில் அங்கம் வகிக்கின்ற எட்டு மாகாண சபை உறுப்பினர்கள் பங்குபற்ற வேண்டிய்ருப்பதாலேயே இந்த உயர் பீடக் கூட்டத்தை ஒத்திவைக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

கடந்த 15ஆம் திகதி இடம்பெறவிருந்த முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடக் கூட்டம் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்ட்டு தொடர்ச்சியான விடுமுறை காரணமாக அனைத்து உயர்பீட உறுப்பினர்களின் வசதி கருதி நாளை 26ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.