முச்சக்கரவண்டிகளுக்கான ஆசனப் பட்டிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அவதானம்

Written By avathani Media Network on Sunday, April 17, 2016


முச்சக்கரவண்டிகளுக்கான பாதுகாப்பு பட்டிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

விபத்துக்களை குறைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோத்தாகொட குறிப்பிட்டுள்ளார்.

செயற்பாட்டு ரீதியில் இந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அறிக்கை தயாரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விபத்துக்களின் போது முச்சக்கரவண்டியில் பயணிப்போர் வெளியில் தூக்கி எறியப்படுவதால் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும் டாக்டர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.

இதனை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பட்டியோ அல்லது பொருத்தமான பாதுகாப்பு முறையொன்றையோ அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.