(இக்பால் அலி)
உடத்தலவின்னை விளையாட்டுக் கழகத்தின் 9 வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி கிரிகெட் சுற்றுப் போட்டி மற்றும் பாரம்பரிய ஆண் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி கண்டி புனித அந்தோனியர் கல்லூரி மைதானத்தில் 16-04-2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தொழில் பயிலுர் அபிவிருத்தி ஆலோசகர் யூ. எல். ஜவ்பர் அவர்களும் கௌரவ அதிதியாக இலங்கை மின்சார சபையின் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் எம். என். என் முனவ்வரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அரபாhத் விளையாட்டுக் கழகம், வின்கோ விளையாட்டுக் கழகம், அரபாத் மெட்ரோ விளையாட்டுக் கழகம், யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம், கலதெனிய விளையாட்டுக் கழகம் ஆகிய விளையாட்டுக் கழங்கள் பங்கேற்றன. இறுதிச் சுற்றுப் போட்டிக்காக வின்கோ விளையாட்டுக் கழகமும் யங் இஸ்டார் விளையாட்டுக் கழகமும் களமிறங்கின. இறுதிச் சுற்றில் வின்கோ விளையாட்டுக் கழகமே இதில் வெற்றி பெற்றது.
இதில் பெண்களுக்கான தொப்பி மாற்றும் போட்டியும் முட்டை எறிதல் போட்டியும் சிறார்களுக்கான இரு சேர்ந்து ஓடும் மூன்று கால் ஓட்டப் போட்டியும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டி ஆகிய பல போட்டிகள் இடம்பெற்றன. தம் பகுதியில் கல்வித் துறையில் சாதனை நிலை நாட்டிய மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
