மேலைத்தேய - கீழைத்தேய அரசியல் கலாசாரம்பற்றி கனேடிய வளவாளர்களுடனான கலந்துரையாடல்

Written By avathani Media Network on Tuesday, April 5, 2016


(எஸ்.எம்.சியாம்)
கெகிராவை, Raapa Campus இன் அரசியல் விஞ்ஞான பீடத்தினால் “மேலைத்தேய - கீழைத்தேய அரசியல் கலாசாரம்” எனும் தொனிப்பொருளிலான ஒரு நாள் கலந்துரையாடல் 04.04.2016 அன்று கல்வி வளாகக் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கனடாவிலிருந்து வெளிவருகின்ற “The Tamilmirror” எனும் ஆங்கில மாத இதழின் பிரதம ஆசிரியரும் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளருமான திரு.சாள்ஸ் தேவசகாயமும் அவரது பாரியாரான பொருளியல் முதுகலைமாணி திருமதி சாள்ஸ் தேவசகாயம் அவர்களும் வளவாளர்களாகக் கலந்து சிறப்பித்தனர். 

Raapa Campus இல் அரசியல் விஞ்ஞானத்துறையில் சிறப்புப்பட்டப் படிப்பைத் தொடரும் ஒரு தொகுதி மாணவர்களுக்கும் வளவாளர்களுக்குமிடையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது பல்வேறு விதமான கருத்துப்பரிமாற்றங்கள், அனுபவப் பகிர்வுகள் மற்றும் இலங்கையில் அரசியல் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் என்பன இடம்பெற்றன.

Raapa Campus இன் ஆலோசனை சபை உறுப்பினர்களான டொக்டர் அப்துல் வாஜித் மற்றும் திரு. ஓ.எல்.சமர்தீன் ஆகியோரும் கலந்துகொண்ட இந்நிகழ்வை Raapa Campus இன் பணிப்பாளர் ரா.ப.அரூஸ் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 









Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.