(மாவத்தகம தினகரன் நிருபர்)
இம்முறை நடைபெறும் மே தின நிகழ்வு விசேட அம்சங்களைக் கொண்டதாக அமையும். என்னுடைய தேர்தல் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் என்றும் காணாதளவு மக்கள் கலந்து கொள்வதற்கு தயாராகவுள்ளார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன். கடந்த காலங்களில் மே தின நிகழ்வுக்காக எங்கள் பகுதியில் இருந்து ஐந்து பத்து பஸ்கள் தான் சென்றன. இது தற்போது மூன்று மடங்காக அதிகரித்து எல்லோரையும் எவ்வாறு அழைத்துச் செல்வதில் என்பதில் சிக்கலில் நாங்கள் இருக்கின்றோம். இம்முறை நடைபெறும் மே தினம் கூட்டம் ஐக்கிய தேசிய கட்சிக்கு மிகுந்த வெற்றிவாய்ப்பை அளிக்கும் என்பதே உண்மை. இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் தெரிவித்தார்
குருநாகல் மாவட்டத்திலிருந்து முஸ்லிம்கள் எவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு கலந்து கொள்ள மாவட்டார்கள். இவர்கள் எல்லோரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்திற்குத் தான் சமூகமளிக்கவுள்ளதாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார் என்று ஊடவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்
முஸ்லிம்கள் இந்த அரசாங்கத்தை கொண்டு வருதற்கு மிகுந்த செயற்பட்டவர்கள். அதேபோல் ஏனைய சமூக மக்களும் செயற்பட்டவர்கள். இவர்கள் எல்லோருக்கும் இந்த நாட்டில் நல்லாட்சியைக் கொண்டுவருவதற்கான தேவைப்பாடு இருந்தது. இது தெளிவாகப் புலப்பட்டது. எல்லோருடைய நல்லாதரவுகளையும் பெற்று அரசாங்கத்தை அமைக்க முடிந்தது. அன்று நாங்கள் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் எமது நாட்டுக்குள் நல்லாட்சியை உருவாக்கியுள்ளோம்.
இந்த நல்லாட்சி தொடர்பாக நாங்கள் தேர்தலுக்கு முன்னர் கூறினோம். மேடைகளில் கூறப்பட்ட விடயங்கள் கணிசமாளவு நிறைவேற்றப்பட்டுள்ளன. மஹிந்த ராஜ பக்ஷவின் கூட்டத்திற்கு முஸ்லிம்கள் எவ்வாறு செல்வார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி

