தற்காலிக உணவு விற்பனை நிலையங்களின் தரத்தினை பரிசோதிக்க விசேட நடவடிக்கை

Written By avathani Media Network on Saturday, April 9, 2016

புத்தாண்டு காலப்பகுதியில் நடத்திச் செல்லப்படும் தற்காலிக உணவு விற்பனை நிலையங்களின் தரத்தினை பரிசோதிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புத்தாண்டு காலங்களிரல் தற்காலிக உணவு பொருள் விற்பனை நிலையங்கள் காணப்படுவதுடன், அனுமதியற்ற சுவையூட்டிகள் அடங்கிய பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிக உணவு விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகளூடாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், நுகர்வோரை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் டொக்டர் பாலித மஹீபால வலியுறுத்தியுள்ளார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.