சித்திரைப் புத்தாண்டில் ஏற்படும் பஸ் முறைப்பாடுகளை 1955க்கு அழைத்துச் சொல்லுங்கள்!!!

Written By avathani Media Network on Thursday, April 7, 2016




(S.சஜீத்)

தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசேட பஸ் சேவையின் போது, பயணிகள் எதிர்நோக்கும் இடையூறுகள் தொடர்பில். 
1955 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கோ அல்லது 011-2333222 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உரிய கட்டணத்தை விட அதிகக் கட்டணம் அறவிடப்பட்டால், பற்றுச்சீட்டு பெற்றுக்கொடுக்காமை, உரிய பாதையில் பயணிக்காது குறுக்கு வீதிகளினூடாகப் பயணித்தல் போன்ற குற்றங்களை, பஸ் நடத்துனர்கள் மேற்கொள்வார்களாயின், அவை தொடர்பில் பயணிகள் முறைப்பாடு செய்யலாம்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.