இஸ்லாமும் கல்வியும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது - அஷ்ஷெய் உமர்தீன்

Written By avathani Media Network on Wednesday, March 16, 2016


(இக்பால் அலி)
இஸ்லாமும் கல்வியும் ஒன்றோடு ஒன்று இணைந்ததாக இருந்து கொண்டிருக்கின்றது. இஸ்லாம் இல்லையெனில் கல்வி இல்லை. கல்வி இல்லையெனில் இஸ்லாம் இல்லை. ஒன்றோடு ஒன்று கலந்ததாக இருக்கிறது. இந்த வகையிலேதான் அப்பாசியாக்களுடைய காலத்தில் கல்வி வளர்ச்சி அதிகரித்துக் காணப்பட்டது. ஆன்மீகக் கல்வி, விஞ்ஞானம் , தொழில் நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய காலம்தான் அப்பாசியருடைய ஆட்சிக் காலம. எனவே எந்தக் கண்டு பிடிப்புக்களை எடுத்தாலும் கூட அதனுடைய ஆரம்பத்தை எடுத்துப் பார்த்தால் அதில் முஸ்லிம்கள் தான் பின்னணியில் இருக்கின்றார்கள் என்பது வரலாற்றுத் துறை சார் ஆய்வாளர்கள் உள்ளிட்ட யாவருக்கும் அறிந்த விடயம். கல்வி மிக முக்கியமான அம்சமாக இருப்பதை நாங்கள் அனைவரும் உணர்கின்றோம் என்று அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் கண்டி மாவட்டத் தலைவர் அஷ்ஷெய் உமர்தீன் தெரிவித்தார்.


கண்டிசித்திலெப்பைஅபிவிருத்திசங்கத்தின் ஏற்பாட்டில் 7 இலட்சம் ரூபாசெலவில் தொழிலதிபர் ஹப்சல் மரைக்காரினால் நிர்மாணிக்கப்பட்ட மலசல கூடத் திறப்புவிழாவும் கல்வி தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டமும் பாடசாலை அதிபர் ஏ. ஜீ. எம். தமீம் தலைமையில் 12-03-2016 நடைபெற்றது. 

அந்நிகழ்வில் பிரதமஅதிதியாகக் கலந்து கொண்ட கண்டிமாவட்ட ஜம்மிய்யதுல் உலமாசபையின் தலைவர் அஷஷெய்க உமர்தீன் அங்கு இவ்வாறுதெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

எனவே எமது எதிர்காலச் சந்ததியினர்கள் இந்தக் கல்வி இல்லாமையினால் இன்று சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவிப்பதை கண் கூடாகப் பார்க்கின்றோம். அதாவது எமது மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளன. அதேவேளை சிறைச்சாலைக்கு செல்வோர் தொகை 20 விகிதமாக அதிகரித்துள்ளன. இன்று இவ்வாறான செய்திகள் எமக்பு வந்த வண்ணம் உள்ளன. சிறைச்சாலைக்கு சென்று பார்த்தால் மிகவும் சிறிய வயதை ஒத்த வாலிபர்கள் அங்கு இருக்கின்றார்கள். இது பற்றி நாங்கள் கரிசனை கொள்ள வில்லை எனில் கல்வி பற்றி அக்கறை காட்ட வில்லை எனில் நிச்சயம் சிறைச்சாலை செல்லும் தொகை அதிகரிக்கும.; இதனால் எமது சமூகம் பாரிய பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டி வரும். எனவே இந்த நிலை மாற வேண்டும் என்று தான் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா கடந்த ஆண்டு முன்னுள்ள ஆண்டை கல்வி ஆண்டாகப் பிரகடனப்படுத்தி மிம்பர் மேடைகளை கல்வி விழிப்புணர்ச்சிக்காகவும் மற்றும் மாநாடுகளை நடத்தி செயற்பட்டு வருகின்றது 

நிர்வாகிகள், உலமாக்கள், செல்வந்தர்கள், ஏழைகள் ஆகிய நான்கு பெரும் முயற்சி செய்தால் இந்த சமுதாயம் முன்னேறும் என்று ஆலிம்கள் கூறுகின்றார்கள். அந்த அடிப்படையில் எமது பணம் படைத்த சகோதரர்கள் அவர்களுடைய திருமண வைபத்திற்ககாக வீண் விரையமாக எத்தனையோ இலட்சக் கணக்கான பணத்தை செலவு செய்கின்றார்கள். அதேபோல வீடு கட்டுபவர்கள் போதியளவு கட்டிக் கொள்ளாமல் மிகவும் படோடோமாக பாரியளவில் கட்டுகின்றார்கள். இவை போல வீணான செலவுகளுக்கு பயன்படுத்தக் கூடிய அந்தப் பணங்களை எமது சமுதாயத்திலுள்ள ஏழைச் சிறார்களின் கல்விக்காக பயன்படுத்வோமாயின் எதிர்காலத்தில் எமது சமுதாயம் சிறந்த விளங்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எதிர்காலத்தில் பல்வேறு திறன் விருத்தி சார்ந்த அம்சங்களில் எமது இளைஞர்கள் முன்னேறுவார்கள்.

கடந்த காலங்களில் உள்ளவர்கள் உரிமையைப் பெற்றெடுத் தந்தார்கள். ஆனால் இன்று நாங்கள் விட்டுக் கொடுத்து விட்டு வெறும் கோழைகளாக இருக்கின்றோம். கண்டியில் பதியூதீன் முஹ்மூத் என்ன கட்டுகஸ்தோட்டை சாஹிராக் கல்லூரி, சவ்லதீய்யா கல்லூரி. தென்னக் கும்புர இந்த சித்திலெப்பைக் கல்லூரி என பலவற்றை எம் முன்னுள்ளோர்கள் பெற்றுத் தந்துள்ளார்கள். நாம் இதனைப் வைத்துப் பயன்பெறாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றோம். நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டியவர்களாக இருப்போம். இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு முன்னுள்ளவர்கள் பல தியாகம் செய்து பெற்றுத் தந்த உரிமைகளை நாங்கள் குறைந்த பட்சம் பாதுகாத்து விட்டாவது சென்றோம் எனில் அல்லாஹ்விடம் இருந்து தப்பிக்க முடியும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சித்திலெப்பை அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் வைத்தியதிகாரி எம். எச். சலாஹுதீன், பேராதனை பல்லைக்கழக அறபு இஸ்லாமியநாகரீகத்துறை தலைவர் நபீழ் பேராதனைபல்கலைக்கழகபல் மருத்துவபீடத்தின்பேராசிரியர்சித்தீக் ,உலமாக்கள் கல்விமான்கள், வர்த்தகப் பிரமுகர்கள் எனப் பலர்கலந்துகொண்டனர்.












Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.