காத்தான்குடி - 06. பிரதான வீதி ஜூஸ்லா பார்மசிக்கு முன்பாக மேட்டார் சைக்கிள் விபத்தொன்று இன்று 19.03.2016 மதியம் 12.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது
இந்த விபத்தில் ஏறாவூரைச் சேர்ந்த ஜாமியுல் அக்பர் மத்ரஸாவின் மௌலவி ஹஸன் ஒஸாமா வயது 24 என்பவரே மரணமடைந்துள்ளார்.
காத்தான்குடி பிரதான வீதி ஊடாக ஆரைம்பதி பக்கம் இருந்து மட்டக்களப்பு பக்கமாக சென்ற போதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது
மோட்டார் சைக்கிளில் இருவர் பயணம் செய்ததாகவும் பயணம் செய்த வாகனம் கட்டுப்பட்டை இழந்த நிலையில் வீதியின் ஓரத்தில் இருந்த கம்பத்துடன் மோதியதாலயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது.
விபத்தில் படுகாயம் அடைந்த நபர் உடனடியாக அண்மையிலுள்ள ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காத நிலையில் பிற்பகல் 3.30 மணியளவில் அவர் அங்கு மரணமடைந்துள்ளார்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.








