ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூகத்தின் SRD ஏற்பாட்டில் வருடாந்தோரும் இடம்பெறும் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் சாதனையாளர்கள் பாராட்டு விழா நேற்று காத்தான்குடி ஜூமைறா பெலசில் தலைவர் வைத்தியர் எம் ஏ ஹாதி தலைமையில் இடம்பெற்றது
மேற்படி கற்கை நெறிக்கு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் திறமைகளை மேலும் வளர்த்தெடுக்குமுகமாக அனுபவமுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களைக்கொண்டு தமிழ் கணிதம் ஆங்கிலம் பொது அறிவு போன்ற முக்கிய பாடங்கள் பரீட்சை வினாத்தாள்கள் தொகுக்கப்படுகின்றன இவற்றில் சித்தியடைந்த 10 பேர் தெரிவுசெய்யப்பட்டு வருடாந்தம் கௌரவிக்கப்படுகின்றனர்
மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம் ஏ சி எம் பதுர்தீன் சுகாதார வைத்திய அதிகாரி யூ எல் எம் நஸீர்தீன் வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் எம் எஸ் எம் ஜாபிர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன உப தலைவர் எம்.ஐ.எம் சுபைர் மின்சார சபையின் அத்தியட்சகர் எம். நௌபல் மீரா பாலிகா தேசிய பாடசாலை அதிபர் எம் சீ எம் சத்தார் பல்கலைக்கழக விரிவுரையாளரும் பொறியியலாளருமான எம் றிசாட் உட்பட பல கல்விமான்கள் கலந்துகொண்டதுடன்
2015 இல் 9யு சித்தி பெற்று சாதனை படைத்த ளசன உறுப்பினர் வைத்தியர் யூ எல் எம் நஸீர்தீன் அவர்களின் புதல்வன் எம் என் நஜாப் அகமட் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
