மூசாப்பும் ஒரு முழு வெயிலும் தொகுப்பு அறிமுக விழா.

Written By avathani Media Network on Saturday, March 12, 2016

(எம்.ரி.எம்.யூனுஸ்)
அகர ஆயுதம் ஏற்பாட்டில் பிரபல கவிஞரும், திரைப்பட இயக்குனரும், எழுத்தாளருமான சாய்ந்தமருது எஸ்.ஜனுாஸ் அவர்கள் எழுதிய “மூசாப்பும் ஒரு முழ வெயிலும்“ கவிதை நுால் அறிமுக விழா எதிர்வரும் ஞயாயிறு (13) மாலை 04 மணிக்கு சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் கவிஞர் பாலமுனை பாரூக் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து சிறப்பிக்கவுள்ளார்

அகர ஆயுத அமைப்பின் தலைவர் முர்சித் வெளியீட்டு உரையினையும் இலக்கிய விமர்சகர் ஜெஸ்மி எம்.மூஸா நுால் நயவுரையினையும் ஆற்றவுள்ளனர்

அரசியல் வாதிகள்-இலக்கிய ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.