(எம்.ரி.எம்.யூனுஸ்)
காத்தான்குடி - 01 அல் அக்ஸா ஆழ்கடல் வாவி மீனவ கிராமிய கூட்டுறவுச் சங்க கட்டிடத் தொகுதி திறப்பு விழா நிகழ்வு 12.03.2016 அன்று பி.ப. 4.00 மணிக்கு அல் அக்ஸா முன்றலில் ஜனாப் A.C.ஐவ்பர் தலைமையில் நடைபெறவுள்ளது.
பிரதம அதிதியாக கெளரவ புனர்வாழ்வு மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் தாஜுல் மில்லத் MLAM.ஹிஸ்புழ்ழாஹ் MA (MP) அவர்களும் கெளரவ அதிதகளாக மட்டக்களப்பு மாவட்ட கடற் தொழில் திணைக்கள உதவிப்பாளர் திரு. றுக்ஸன் C குறூஸ் அவர்களும் காத்தான்குடி பிரதேச செயலாளர் அல்ஹாஜ் SH.முஸம்மில் SLAS அவர்களும் UNDP பிராந்திய ஒருங்கிணைப்பாளர் திரு S.ராகு ராமமூர்த்தி அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கெளரவ இராஜாங்க அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 15 மில்லியன் நிதியில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டடமே திறந்து வைக்கப்பட்டு மீனவர் சங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது

