'பத்து வயது சிறுமிக்கு வளர்ப்புத் தாய் வைத்த சூடு. கண்கலங்க வைத்த சம்பவம்' என்ற தலைப்பில் கட ந்த 14.03.2016 ஆம் திகதியன்று எமது இணையத் தளத்தில் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது.
அக்கட்டுரை திருட்டுக் கட்டுரை என்றும், எமது இணையத் தளத்தில் வெளிவந்த கட்டுரையை நீங்கள் திருடித்தான் வெளியிட்டுள்ளீர்கள் என்றும், முடிந்தால் தவறு என்று சொல்லுங்கள் என்றும் www.kkytimes.lk உடைய ஆசிரியர் தொலைபேசி மூலம் எம்முடன் கதைக்கும் போது தனது வேதனையை சவாலாக வெளிப்படுத்தினார்.
இந்த கட்டுரையை ஒருவர் எமது இணயத்தளத்திற்கு அனுப்பி தான் இதனை முகநூலில் இருந்து பெற்றுக் கொண்டதாகவும் இதனை தங்கள் இணையத் தளத்தில் பிரசுரிக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.
அன்றைய தினம் அது முக்கிய செய்தியாக இருந்ததாலும் அதை எழுதியவர் யார் என்று முழுமையாக எமக்குத் தெரியாத காரணத்தினாலும் அதனை நாம் முகநூலைப் பார்த்து முகநூலில் வெளிட்டவரின் பெயருடைனேயே வெளிட்டோம்.
இது
www.kkytimes.lk இணையத்தளத்தில் வெளிவந்ததாக எமக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை .
அப்போதவர்கள் எமக்கறிவித்திருந்தால் நாம் அவர்களுடைய பெயரை தெரியப்படுத்தியிருப்போம்.
எந்த செய்தியையும் திருடித்தான் போட வேண்டும் என்ற கட்டாயம் அவதானி இணையத் தளத்திற்குக் கிடையாது. அது தேவையும் அல்ல.
குறித்த அந்த விடயம் தொடர்பில் அது அவர்களுடைய செய்திதான் என்பதாலும், அதனை அவர்கள் மிகவும் சிரமப்பட்டே சேகரித்திருக்கிறார்கள் என்பதாலும்
நிர்வாகத்தினரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.
நடந்த தவறுக்காக நாம்
www.kkytimes.lk
இவ்வண்ணம்
அவதானி நிர்வாகம்
16.03.2016


