கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் கள விஜயம்...

Written By avathani Media Network on Saturday, March 26, 2016


(ஜுனைட்.எம்.பஹ்த்)

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் கடந்த வியாழக்கிழமை 
(24.03.2016)  
யன்று 
களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டு காத்தான்குடி நகரசபைக்கு உட்பட்ட சில வீதிகள் செப்பனிடப்படாமல் இருப்பதனை பார்வையிட்டதுடன் அதனை மிக விரைவாக செப்பனிட்டு மக்கள் பாவனைக்கு வழங்குவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றார் 

இதனடிப்படையில் நகரசபை தொழிநுட்ப உத்தியோகத்தர்கட்கு 
இதுசம்பந்தமான செயற்படுத்த வேன்டிய விடயங்களை அறிவுறுத்தினார், 

மக்கள் பயனிப்பதற்கு முகங்கொடுக்கும் அசௌகரியங்களையும், அவஸ்தைகளையும் தீர்ப்பதற்கு 
செப்பனிப்பட வேண்டிய இன்னும் பல வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன் 
அவ்வீதிகளின் நிலைப்பாட்டினையும் அறிந்து கொண்டார் 

அதனை தொடர்ந்து நகரசபையின் 
தொழிநுட்ப அதிகாரிகளுடன் இணைந்து முன்னுரிமைபடுத்த வேண்டிய வீதிகளை 
பட்டியலிட்டு அவ்வீதிகளை அளவெடுத்ததுடன் செப்பனிடுதலுக்கு தேவையான முழு மதிப்பீட்டினையும் மேற்கொண்டு அவ்வீதிகளை வெகுவிரைவில் செப்பனிட்டு 
கொடுக்குமாறு நகரசபை அதிகாரிகளை வேண்டிக் கொண்டதுடன் தொழிநுட்ப அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி பணிப்புரையினை விடுத்தார்.






Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.