மூன்று வருடமாக சூடு வைத்து 10 வயது சிறுமி சித்திரவதை..! காத்தான்குடியில் சம்பவம்

Written By avathani Media Network on Sunday, March 13, 2016



காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காத்தான்குடி 05 இல் மூன்று வருடமாக பத்துவயது சிறுமிக்கு தனது தந்தையின் இரண்டாவது மனைவியினால் சூடு வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் கல்வி கற்றுவரும் பாத்திமா இஸ்ரி (வயது 10) என்ற சிறுமியே இச் சம்பவத்தில் பதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று (12) காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு குறித்த சிறுமியின் தந்தை மற்றும் சித்தி(தந்தையின் இரண்டாவது மணைவி) ஆகியோர் காத்தான்குடி பொலிசாரால் விசாரணை க்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சிறுமியின் தந்தை காத்தான்குடியில் இஸ்லாத்திற்கு முறனான அத்வைத கொள்கை யினை பரப்பிவரும் அப்துல் றவூப் குழுவில் முக்கிய ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது..

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 




Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.