மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவி வரும் இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியமும் சமூக மேம்பாட்டுக்கான இளைஞர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு இன்று 12.03.2016 சனிக்கிழமை ஒன்றியத்தின் தலைவரான MIM. ஹாரிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இரத்ததான முகாம் காலை 08.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது மீள்குடியேற்ற புணர் வாழ்வு இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ். MLAM. ஹிஸ்புல்லாஹ் MA, MP அவர்கள் உற்பட காத்தான்குடி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். 100 மேற்பட்டோர் இரத்தத்தினை வழங்கிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




