இஸ்லாமிய முன்மாதிரிப் பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

Written By avathani Media Network on Saturday, March 26, 2016

(எம்.ரி.எம்.யூனுஸ்)

இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் கீழ் இயங்கும் இஸ்லாமிய முன்மாதிரிப் பாடசாலையினதும் அல்குர்ஆன் மனனப் பிரிவினதும் நான்காவது சான்றிதழ் வழங்கும் விழாவும் நீண்ட காலம் சன்மார்கப் பணியாற்றிய ஆலிம் மற்றும் நீண்ட காலம் இஸ்லாமிய முன்மாதிரிப் பாடசாலையில் சேவை புரிந்த ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வு தாறுல் அர்கம் மாநாட்டு மண்டபத்தில் 25.03.2016 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 6.15 வரை பெண்களுக்கும் மாலை 6.45 தொடக்கம் 9.30 மணி வரை ஆண்களுக்கும் நடைபெற்றது.

இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய தலைவர் அஷ்ஷெய்க் ABM.அலியார் (றியாழி) MA தலைமையில் நடைபெற்றது. பெண்கள் நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞானபீட பீடாதிபதி கலாநிதி MIS.ஸபீனா அவர்களும் ஆண்கள் நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் MMM.நாஜிம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்புப் பேச்சாளராக தென் இந்திய சழூகநீதி முரசு ஆசிரியர் சகோதரர் CMN.சலீம் MA கலந்து கொண்டனர்.














Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.