மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது காணப்பட்டு வரும் இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தினால் (12.03.2016) இன்று மாபெரும் இரத்தான நிகழ்வென்றை ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வானது ஒன்றியத்தின் தலைவரான MIM. ஹாரிஸ் அவர்களின் தலைமையிலேயே இடம்பெற்றன.
இவ் இரத்ததான முகாம் இன்று காலை 08.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் காரியாலயத்திலேயே இடம் பெற்றது. இதன்போது மீழ்குடியேற்ற புணர் வாழ்வு இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ். MLAM. ஹிஸ்புல்லாஹ் MA,MP அவர்கள் உற்பட காத்தான்குடி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு 100 மேற்பட்டோர் தமது இரத்தத்தினை தானமாக வழங்கிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எவரொருவர் ஓர் உயிரை வாழவைக்கிராறோ அவர் மனிதர்கள் அனைவரையும்; வாழ வைத்தவராவார் (அல் குர்ஆன் 5:32)











