மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் எதிர்காலத்தில் BCAS Campus பாடசாலைகளுடன் இணைந்து எவ்வாறான காத்திமான பணிகளை மாணவர்களுக்குச் செய்ய முடியும் என்பது தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் ஒன்று கடந்த 06/03/2016 அன்று கல்முனை BCAS வளாகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட உயர்தரப் பாடசாலை அதிபர்கள். பிரதி அதிபர்கள் மற்றும் உயர்தர பாடங்களுக்குரிய பொறுப்பாளர்கள் ஆகியோருடன் BCAS Campus சார்பாக அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரகுமான் முன்னாள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும், தற்போதைய BCAS Campus இன் பீடாதிபதியுமாகிய திருமதி சாணிகா ஹிரும்புரிகம, கல்முனை வளாகத்தின் முகாமையாளர் உவைஸ் மொஹிதீன் பாவா மற்றும் ஏனைய BCAS உயர்கல்வி நிறுவனத்தின் உயர் மட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மாலை 6.00 மணிக்கு தொடங்கிய இக்கலந்துரையாடல் இராப்போசனத்துடன் இரவு 10.00 மணிக்கு நிறைவடைந்தது.
படங்களும், தகவலும் - பைஸர் அமான்
