காத்தான்குடி ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவில் இருந்து சித்தியடைந்த 59 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு..

Written By avathani Media Network on Friday, March 25, 2016

(ஜுனைட்.எம்.பஹ்த்)

காத்தான்குடி குர் ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சபையினால் நடாத்தப்படும் அல்குர்ஆன் பரீட்சையில் ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவில் இருந்து சித்தியடைந்த 59 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் ஸாலிஹ் மத்ரஸாவின் 24 வது வருட மாணவர்கள் அல்குர்ஆன் கற்று வெளியாகும் மாபெரும் விழா 25.03.2016 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் 
ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா அதிபர் M.S.M .அஸார் மௌலவி தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது அல்குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த 59 மாணவர்களுக்கும், இம்மத்ரஸாவின் பழைய மாணவர்களுக்கும், மத்ரஸாவில் இருந்து வெளியாகி தற்பொழுது உயர்நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் சமூகத்தில் பல் துறை சார்ந்த மூத்தவர்களுக்கு அதி உயர் கெளரவ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர் , அத்துடன் மத்ரஸா மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் சான்றிதழும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக புணர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் தாஜுல் மில்லத் அல்ஹாஜ் M.L.A.M.ஹிஸ்புல்லாஹ் MA.MP அவர்களும் காத்தான்குடி காழி நீதிபதியும்,ஜாமிஅதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் பிரதி அதிபர் அல்ஹாஜ் மௌலவி S.M.அலியார் (பலாஹி) ஆகியோர் கலந்துகொண்டனர்.








Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.