40 மில்லியன் ரூபா பெறுமதியான நேரத்தை இலவசமாக வழங்கிய SLRC

Written By avathani Media Network on Sunday, March 13, 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான ஒளிபரப்பு நேரத்தை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் இலவசமாக வழங்கியுள்ளது.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது இவ்வாறு இலவசமாக ஒளிபரப்பு நேரம் வழங்கப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வின் போது இந்த விடயங்கள் தெரிய வந்துள்ளன.

மஹிந்த ராஜபக்ஸவிற்கு பிரச்சாரம் வழங்கும் நோக்கில் சில நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுயாதீன தொலைக்காட்சியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கட்டணம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.