மஜீத் ரப்பானிக்கும் மனைவிக்கும் 28ம் திகதிவரை விளக்கமறியல். -

Written By avathani Media Network on Monday, March 14, 2016

(முஹம்மது நியாஸ்)
பத்து வயது சிறுமியை தீயில் காய்ச்சப்பட்ட உலோகங்களால் சூடிட்டு கொடூரமாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தை MM. மஜீத் ரப்பானியும் அவர் மனைவியான சிறுமியின் வளர்ப்புத்தாயும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதன்போது இருவரையும் இம்மாதம் எதிர்வரும் 28ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மேலும் தற்போது காத்தான்குடி தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் குறித்த சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்வதுடன் வைத்திய அறிக்கையை பெற்று அதை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் பொலிசாருக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் பிரபல சட்டத்தரணிகளான பிரேம்நாத், முஹம்மது றிஸ்வி மற்றும் பிரபல பெண் சட்டத்தரணி ஒருவரும் ஆஜராகியிருந்ததுடன் எதிர்த்தரப்பான மஜீத் ரப்பானி தரப்பில் சட்டத்தரணி விஜயகுமாரும் ஆஜராகியிருந்தார். 
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.