மார்ச் 21 ஆம் திகதி அமையப்பெற்ற உலக கவிதை தினம் கொண்டாட்டம் நிமிர்த்தம் உலக கவிதை தின கொண்டாட்ட விழா 2016 மார்ச் மாதம் 21 ஆம் திகதி பி.ப. 3.00 மணிக்கு கொழும்பு -07, நெளும்பொக்குண கலையரங்கில் நடாத்துவதற்கு கலாசார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடுகள் செய்துள்ளது.
2016 உலக கவிதை தின கொண்டாட்ட விழா உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன அவர்களின் தலைமையில் மற்றும் பிரபல கவிஞர் சிரேஸ்ட ஊடகவியலாளர் சிறிலால் கொடிகார அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெறவூள்ளது.
இதன்போது கவிதைத்துறையில் பெரும் பங்காற்றிய பிரபல கவிஞர் ஐந்து பேருக்கு “காவ்யமாணி” கௌரவ விருது முதலமுறையாக வழங்கப்படுவதுடன், தமிழில் கல்வயல் வே. குமாரசாமி மற்றும் கலைவாதி கலீல் ஆகியோருக்கு கௌரவ விருதுகள் வழங்கப்படுவதுடன், இதன்போது கவிதைகள் அடங்கிய சிறப்பு மலர் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிட்டு வைக்கப்படவூள்ளது.
உலக கவிதை தினம் கொண்டாட்ட விழாவின்போது புத்தசாச கலப்பத்தி, கலாநிதி பிரணீத் அபேசுந்தர மற்றும் கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன் அவர்களினால் கொண்டாட்ட விழா சொற்பொழிவூகள் நடாத்தப்படவூள்ளது.
இத்துடன் கவிதை நூல்களை கொள்வன செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

