கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் 20 வருடாந்த பொதுக் கூட்டமும், பாராட்டும் நிகழ்வும்

Written By avathani Media Network on Monday, March 21, 2016

(இக்பால் அலி)
எமது சமூகத்திற்காக அதி உச்ச பங்களிப்யை வழங்க வேண்டுமாடுமாயின் ஒற்றுமை இருத்தல் வேண்டும் என்பதே நிதர்சமான உண்மையாகும். ஒரு பலம் வாய்ந்த அமைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒற்றுமை அவசியமாகும். இந்த வகையில் ஜின்னா ஞாபகார்த்த மண்டத்தை முன்னெடுத்துச் செல்லும் கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தினர் எல்லோரும் ஒன்றிணைந்து விட்டுக் கொடுப்புடன் ஒற்றுமையுடன் செயற்பட்டுவருதையிட்டு நான் மட்றற்ற பெருமிதம் அடைகின்றேன்.

அதேவேளை எமது சமூகத்தின் தேவையை உணர்ந்து செயற்படுவதோடு சமூகத்தின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை கௌரவிப்பது பாராட்டுவது ஒரு நல்ல விடயமாகும் என்று இலங்கைக்கான பாக்கிஸ்தான் நாட்டுத் தூதுவராலயத்தின் பொதுச் சபையின் பிரதிநிதி ஹப்சல் ஏ மரைக்கார் தெரிவித்தார்.

கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் 20 வருடாந்த பொதுக் கூட்டமும் கண்டி ஜின்னா ஞாபகார்த்த மண்டத்தின் ஊடாக கண்டி வாழ் முஸ்லிம் சமூகத்திற்காக பங்காற்றிய மூத்த வர்த்தக பிரமுகர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கண்டி ஞாபகார்த்த மண்டபத்தில் 18-03-2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கைக்கான பாக்கிஸ்தான் நாட்டுத் தூதுவராலயத்தின் பொதுச் சபையின் பிரதிநிதி ஹப்சல் ஏ மரைக்கார் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

நாங்கள் ஒரு நல்ல நிகழ்வை நடத்துவற்காக இலங்கையிலுள்ள எமது பிரதமரை அழைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்க்க வில்லை. இறைவன் நாடினான் பாக்கிஸ்தான் நாட்டு பிரதமர் நவாஸ் ஷரிப் அவர்களே இங்கு வருகை தந்தார்கள். யாருடைய திறனும் இல்லை. அவர் செய்தார் என்று இல்லை. நாங்கள் ஒன்று பட்டு ஒரு காரியத்துக்காக முயற்சி செய்தோம். இதனுடைய வெற்றியை இலவாகக் கண்டு கொண்டோம். எவையானாலும் தூய்மையான எண்ணத்துடன் எல்லோருடனும் கைகோர்த்து ஒற்றுமையுடன் செயற்படும் போது எந்த காரியமும் இலவாக கைகூடும் என்பதை இப்படியான விடயங்கள் எங்களுக்கு உணர்த்தி நிற்பதை நாங்கள் அனுவபவ ரீதியாக கண்டிருக்கின்றோம். 

நாம் எல்லோரும் கஷ்டப்படுவது பொது மக்களுக்கு உதவி செய்தற்காகும். பொது மக்களுக்கு நல்ல காரியங்கள் மேற்கொள்ளும் போது நாம் பாடு பட்டு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் கைகூடுவதைப் பார்க்கின்றோம். இந்த அலி ஜின்னா ஞாபகாத்த மண்டபத்தை புனர்நிர்மாணம் செய்து குறைந்தளவு விலைக்கு வாடகைக்கு விட்டு வருகின்றோம். ஆயினும் இந்தப் பகுதியிலுள்ள ஏழை குமார் பிள்ளைகளுடைய கல்யாணத் தேவைகள் நிறைவு செய்வதற்கு இந்த மண்டபம் கணிசமானளவு பங்களிப்பை வழங்குகின்றன. எனவே இந்த ஏழை மக்களுடைய மனமுவந்த பிரார்த்தனைகள் தான் எங்களுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம். 

அதேவேளை கல்வி ஒன்றால் மட்டுமே ஒரு சமுதாயத்தை தலைநிமிர வைக்க முடியும் என்ற வகையில் பாக்கிஸ்தான் நாட்டுத் தூதுவலராயத்தினுடைய அனுசரணையுடன் கணனி தொழில் தொழில் பயிற்சி நிலையம் ஒன்று நடைபெறுகின்றன. பெரு எண்ணிக்கையான மாணவர்கள் தொழில் திறன் தகைமை சார் கற்கை நெறிகள் இங்கு பூர்த்தி செய்து வருகின்றார்கள். எதிர்காலத்தில் இங்கு பயிலும் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் பெற்று மேற்படிப்புக்காக பாக்கிஸ்தான் நாட்டுப் பலக்லைக்கழகங்களுக்கு செல்வதற்கான ஒப்பந்தளை சமீபத்தில் மேற்கொண்டுள்ளோம். எமது இளம் தலைமுறையினர்களுக்கு கல்வி ரீதியாக களம் அமைத்துக் கொடுத்து வருகின்றோம்.

நவீன வியாபாரத்துறையிலும் கல்வித் துறையிலும் ஆலவிருட்மாய் தலை நிமிர்ந்து நிற்காக வேண்டி பல்வேறு வகையிலும் பாக்கிஸ்தான் நாட்டுத் தூதுவராலயம் ஜின்னாவின் ஞாபகார்த்த நினைவாக இம்மண்டபத்திற்கு அன்று தொட்டு இன்று வரை பல்வேறு வகையிலான உதவிகளைச் செய்து வருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய ஆண்டு நடப்பு வருடத்திற்காக புதிய நிர்வாகத் தெரிவும் இங்கு இடம்பெற்றது. போட்டியின்றி சகல நிர்வாகத் தெரிவுகளும் நடைபெற்றன. தலைவராக ஏ. றசாக் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார், செயலளராக ஏ, சீ. எம். ரஹ்மான், பொருளாளராக ஏ. எல். எம். ராசிக் தெரிவு செய்யப்பட்டனர். அதேவேளை நான்கு பேர் கொண்ட உப தலைவர்களும் தெரிவு செய்யப்பட்டனர் எம். எச். சலீம்டீன், எம். எம். நியாஸ், எம். எம். முஸம்மில், எம். ஐ. எம் ஜிப்ரி ஆகியோர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவு செய்யப்பட்டனர்.

அதேவேளை இந்நிகழ்வில் கடந்த காலங்களில் ஜின்னா ஞாபகார்த்த மண்டபத்தின் மேம்பாட்டுக்காக பங்களிப்புச் செய்த மூத்த வர்த்தகப் பிரமுகர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஏ, எம். இஸமாயீல், ஏ, ஏ, எம். யூசுப், என். ஏ. எஸ். முபாரக், எஸ். எம். யஹியா, ஜே. ஏ. எம். பாரூக் ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் விசேட விருதாக இறைவரித் திணைக்களத்திற்கு தம்முடைய வரிகளை கடந்த பத்து வருடங்களாக நேர்த்தியான முறையில் செலுத்தி அதி உயர் விருதைப் பெற்றுக் கொண்ட என். எம். இஸ்மாலைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இதில் மௌலவி பஸ்லுர்ரஹ்மான் மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.















Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.