நிந்தவூர் மனித நலன்புரி சமூக சேவைகள் ஒன்றியத்தின் 20வது ஆண்டு நிறைவும், சமூக சேவையாளர்கள் கௌரவிப்பும்.

Written By avathani Media Network on Wednesday, March 16, 2016

(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் மனித நலன்புரி சமூக சேவைகள் ஒன்றியத்தின் 20வது ஆண்டு நிறைவு விழாவும், சமூக சேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் சமீபத்தில் நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

மனித நலன்புரி சமூக சேவைகள் ஒன்றியத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், அம்பாரை மாவட்ட சிரேஷ்ட சிறுவர் நன்நடத்தை அதிகாரி எம்.ஏ.ஏ.வசீர்டீன், சம்மாந்துறை சிறுவர் நன்நடத்தை அலகுப் பொறுப்பதிகாரி எம்.என்.எம்.றபாஸ், இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி எம்.ஐ.எம்.பரீட், ஓய்வு நிலை அதிபர்களான எம்.எம்.றகீம், எஸ்.அஹமட், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.எம்.அன்சார் உள்ளிட்ட பெருந்தொகையான பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் பைசால் காசீமுக்கு 'மக்கள் சேவகன்' பட்டமும், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்திற்கு 'புரட்சித் திலகம்' பட்டமும், அம்பாரை மாவட்ட சிரேஷ்ட சிறுவர் நன்நடத்தை அதிகாரி எம்.ஏ.ஏ.வசீர்டீனுக்கு 'சேவைச் சிகரம்' பட்டமும் வழங்கி, நினைவுச் சின்னங்கள், பொன்னாடைகள் என்பன போற்றி கௌரவிக்கப்பட்டது.

சின்னஞ் சிறுவர்களின் கலை,கலாச்சார நிகழ்சிகளும் இடம் பெற்றன.







Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.