மாடியில் இருந்து விழுந்த சிறுமி ஆபத்தான நிலையில்..

Written By avathani Media Network on Wednesday, February 24, 2016

(ஜுனைட்.எம்.பஹ்த்)
புதிய காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியில் வசிக்கும் பாத்திமா ஸாறா (7வயது) என்ற சிறுமி நேற்றைய முன் தினம் (22.02.2016) தனது வீட்டிற்கு அருகில் நிர்மானிக்கப்பட்டுவரும் மாடி வீடு ஒன்றின் இரண்டாம் மாடியில் விளையாடிக்  கொண்டிருக்கும் போது எதர்ச்சியாக கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்த வேகத்தில் கடுமையான உபாதைக்குள்ளான அச்சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை யில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஆபத்தான நிலையில் இருக்கும் இச்சிறுமி ஊடகவியலாளர் நண்பர் எம்.எஸ்.எம் சஜீ அவர்களின் ஒரே ஒரு சகோதரியுமாவார்.
இந் நேரத்தில் இச் சிறுமியின் சுகத்துக்காகவும்,நீண்ட ஆயுலுக்காகவும்,குடும்பத்தின் மன ஆறுதலுக்காகவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்...




Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.