(S.சஜீத்)
கிழக்கிழங்கை பல்கலைக்கழகத்தில் தலைமைத்துவ கற்கைநெறியை பின்தொடரும் மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்ட செங்கல்லடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி எனும் கிராமத்தினை பார்வையிடுவதற்காக (27.02.2016) சனிக்கிழமை கல விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இவ் கள விஜயத்தின் போது அங்கு காணப்படும் மக்களை சந்தித்து அம்மக்களுடன் மற்றும் அக்கிராம அரச அதிகாரிகளுடனும் அங்கு வாழும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் பற்றிய தகவல்களை ஒரு சில வரைபடங்களின் மூலம் கலந்துரையாடினர்












