புதிய அரசியல் அமைப்பு குறித்த மக்களின் கருத்து கோரும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது.
அம்பாறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் புதிய அரசியல் அமைப்பு குறித்து மக்களின் கருத்துக் கோரப்பட உள்ளது.
இந்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறு கருத்துக்கள் கோரப்பட்டிருந்தன.
அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் மத்தியில் கூடுதல் அக்கறை காணப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட மக்களுக்கு அடுத்த மாத இறுதியில் மீளவும் புதிய அரசியல் அமைப்பு குறித்து கருத்து வெளியிட சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது.

