160 ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ், ரயில் பெட்டிகளை நாட்டிற்கு இறக்குமதி செய்யவுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டார்.
ரயில் பயணிகளின் வசதி கருதியும், ரயில் போக்குவரத்தை மேலும் விஸ்தரிப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
160 ரயில் பெட்டிகளுடன் 10 என்ஜின்கள் மற்றும் 15 அதிவேக ரயில்களும் தருவிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ரயில் என்ஜின்கள் மற்றும் அதிவேக ரயில்களை இறக்குமதி செய்வதற்காக எதிர்காலத்தில் விலைமனுக்களை கோருவதற்கும் எண்ணியுள்ளதாக பிரதியமைச்சர் கூறினார்.
எந்தவொருவரும் விலை மனுக்களை கோர முடியும் என்றும், அதற்காக கடன் திட்டமொன்றின் ஊடாக அவற்றை இறக்குமதி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க மேலும் தெரிவித்தார்.

