மக்கள் பிரதிநிதிகள் தேசிய தலைவருக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் : நாபீர் ஹாஜி ஆலோசனை

Written By avathani Media Network on Friday, February 26, 2016

(சஜா .எம்.அனைஸ்)
சர்வதேசம் வரை சென்று முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் இலங்கை முஸ்லிம்களின் தலைமையாக இருக்கும் அமைச்சர் ரௌப் ஹக்கீம் அவர்களின் தலை மீது பாரிய சுமை இருக்கும் போது எமது உள்ளூர் தலைமைகள் அசமந்தமாக இருப்பது வேதனையளிக்கிறது என அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாபீர் பௌண்டசன் தலைவரும் ECM (Pvt) Ltd பணிப்பாளர் நாயகமுமான அல் -ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் அவர்கள் தெரிவித்தார்.
 
தமது உரையில் மேலும் அவர் தெரிவிக்கையில் : 

முஸ்லிம்களின் மீது தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் அநீதிகளின் போது தயங்காமல் குரல் கொடுத்துவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையின் மீது தேசிய அளவில் பாரிய  பல பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய கடமை இருப்பதை மறந்து சிறிய சிறிய பிரச்சினைகளையும் தலைவரினாலையே தீர்க்க வேண்டும் என எமது மக்கள் பிரதிநிதிகள் நினைத்து செயலாற்றுவது கவலையளிக்கக்கூடிய ஒன்று. 

இதனால் தலைமைத்துவதிற்க்கும், கட்சிக்கும் அதிருப்தி உண்டாகி வருவது தெளிவாகிறது, இதனை நிவர்த்திசெய்ய வேண்டியுள்ளது உங்களின் கடமையாகவே உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. தீயசக்திகளின் சதியை  முறியடித்து கட்சியை சரியாக கொண்டுசெல்வது பிராந்திய தலைவர்களாகிய உங்கள் கைகளிலையே இருக்கிறது என மேலும் சுற்றிகாட்டினார்.

மக்கள் தமது பிரச்சினைகளை தீர்த்துவைக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்து உள்ளுராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை அனுப்பிவைத்த அவர்களின் பிரதிநிதிகள் மக்களின் பிரச்சினைகளை தாமாகவே முன்வந்து தீர்த்துவைக்க முடியாமல் தலைவரிடமே தவமாக கிடக்கும் எமது பிரதிநிதிகளை நினைக்கின்ற போது வேடிக்கையாகவே உள்ளது. இனி வரும் காலங்களிலாவது தலைமைத்துவதிட்க்கு கட்டுப்பட்டவகையில் எமது மக்கள் பிரதிநிதிகள் சுயமாக தமது சேவைகளை செய்ய முன்வர வேண்டும் என மேலும் வலியுறுத்தினார்.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.