காத்தான்குடி முஹைதீன் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் வீதி குடைக்காரர் வீதிக்கு தீர்வு...

Written By avathani Media Network on Friday, February 26, 2016

(ஜுனைட்.எம்.பஹ்த்)
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கடந்த 25.02.2016 அன்று புதிய காத்தான்குடி முஹைதீன் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் வீதி செபனிடும் பணியை பார்வையிட சென்றபோது, குடைக்காரர் வீதியில் வசிக்கும் பொதுமக்கள் குடைக்கார் வீதி செப்பனிடப்படாமல் இருப்பதனால் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றோம் என்றும் அதனை சீர்செய்து தருமாறு வேண்டியிருந்தனர், 

அதனை தொடர்ந்து இவ்வீதியினை விரைவாக சீர்செய்து செப்பனிடுவதற்கான வேண்டுகோளினை காத்தான்குடி நகர சபைக்கு விடுத்திருந்தார் அதனை தொடர்ந்து நகரசபையினால் அதற்குரிய பொருட்கள் வரவழைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றது.

நேற்று வியாழக்கிழமை (25.02.2016) அதிகாலை பெய்த அடைமழையினால் குடைக்காரர் வீதியில் மழைநீர் வடிந்தோட முடியாமல் பொதுமக்களது வீடுகளிலும், வீதியின் நடுப்பகுதியிலும் நீர் தேங்கி நின்றமையினால் அப்பிரதேச மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக் முகம்கொடுத்தனர், மேலும் முஹைதீன் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் வீதியின் நீரானது குடைக்காரர் வீதியினால் வடிந்தோடி தோணாவில் சேர்கின்றது அதனால் அவ்வீதியில் வசிக்கும் பொதுமக்களது குடியிருப்புக்களுக்குள் மழைநீர் செல்கின்றமையினால் முஹைதீன் பொரிய ஜூம்மா பள்ளிவாயல் வீதியில் தடைகளிட்டு தடுத்து இருந்தனர் இதனால் மழைநீர் வீதியில் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்தது.

அதனை நேரில் சென்று பார்வையிட்டதுடன் அம்மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறிதுடன் வீதியினை வெகுவிரைவில் பூரணப்படுத்தி தருவதாவும் கூறி சுமூகமாக இதனை தீர்த்துவைத்தார். அத்துடன் அவ்வீதியினை நீரோட்டத்தின் அடிப்படையில் மழைநீர் வடிந்தோடக்கூடிய வகையில் எவ்வாறு அமைக்கவேண்டும் என்று காத்தான்குடி பிரதேசசபை தொழிநுட்ப அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதுடன் அதற்கான பணிப்புரையினையும் விடுத்ததாக ஊடகப்பிரிவு தெறிவித்தது.








Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.