அதிபர் பரீட்சையில் சித்தியடைந்த 4076 பேருக்கான நியமனங்களை வழங்க நடவடிக்கை

Written By avathani Media Network on Saturday, February 20, 2016

அதிபர்களுக்கான பரீட்சையில் சித்தியடைந்த 4076 பேருக்கான நியமனங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிபர் நியமனங்களுக்கான கடிதங்களை மார்ச் மாத இறுதிக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
2005 ஆம் ஆண்டிலேயே அதிபர் சேவையின் தரம் மூன்றிற்கான போட்டிப் பரீட்சை இறுதியாக நடத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னர் கடமைகளை நிறைவேற்றுவதற்கான அடிப்படையிலேயே அதிபர்களுக்கான பதவி வெற்றிடங்கள் நிரப்பப்ட்டு வந்துள்ளன.
இதன் பிரகாரம் 5,600 பதவி வெற்றிடங்களுக்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சுமார் 19,000 பேர் தோற்றியிருந்ததுடன், அவர்களில் சித்தியடைந்த 4076 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
நியமனம் வழங்கப்படவுள்ளவர்களுக்கு முதற்கட்டமாக இரண்டு வாரகால பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர், அதிபர் பதவிக்கான வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கு அமர்த்தப்படுவார்கள் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2015 நவம்பர் மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு சேர்த்துக்கொள்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் நூற்றுக்கு 40 அல்லது அதனைவிட கூடுதல் புள்ளிகளைப் பெற்றவர்களின் பெயர்களை www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் கல்வி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.